வகைப்படுத்தப்படாத

தொடர்ந்து 11வது முறையாக முதலிடத்தில் முகேஷ் அம்பானி

(UTV|INDIA)-தொடர்ந்து 11வது முறையாக இந்தியா கோடீஸ்வரர்கள் வரிசையில்,   தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.3.03 லட்சம் கோடி என தெரியவந்துள்ளது.

இந்தியா கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி, 3 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

விப்ரோ அதிபர் அசிம்பிரேம்ஜி (ஒரு லட்சத்து 47 கோடி ரூபாய்) இரண்டாவது இடத்தையும், ஆர்சலர் மிட்டல் தலைவர், லட்சுமி மிட்டல் (1 லட்சத்து 28 ஆயிரத்து 100 கோடி ரூபாய்) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இவர்களை தொடர்ந்து ‘டாப் -10’ல் இந்துஜா சகோதரர்கள், பலோன்ஜி மிஸ்திரி, ஷிவ் நாடார், கோத்ரேஜ் குடும்பத்தினர், திலிப் சங்வி, குமாரமங்கலம் பிர்லா, கவுதம் அதானி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்த வருடத்தில் மட்டும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 65 ஆயிரத்து 100 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

ගම්පහ දිස්ත්‍රික්කයේ ප්‍රදේශ රැසකට ජලය කප්පාදුවක්

Serena to face Halep in Wimbledon final