சூடான செய்திகள் 1

தொடர்ந்தும் பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது-சஜித்

(UTVNEWS COLOMBO) – எதிர்காலத்தில் சிறந்த முடிவை எடுப்பார்கள். ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக தான் நியமிக்கப்படுவது உறுதி என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

மேலும், தெரிவித்த அவர் தொடர்ந்தும் இந்த பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது. எனவே, எதிர்காலத்தில் சிறந்த முடிவை எடுப்பார்கள். ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக தான் நியமிக்கப்படுவது உறுதி. காலகிரமத்தில் அந்த செயற்பாடு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

அடுத்துவரும் 3 அல்லது 4 நாட்களுக்குள் இறுதி முடிவு வெளியாகும் என்பதே எனது நம்பிக்கை. நான் போட்டியிட்டால் 51 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற முடியும். மற்றைய கட்சிகளின் நிலை தொடர்பில் எனக்கு தெரிவிக்க முடியாது என்றார்.

Related posts

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் சீர்திருத்தம்

பிறவியிலேயே கையை இழந்த மாணவிக்கு ஜனாதிபதியினால் செயற்கை கை அன்பளிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்துள்ளது