சூடான செய்திகள் 1

தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள சரணாலய தொழிற்சங்க ஒன்றியம்

(UTV|COLOMBO) – விபத்து கொடுப்பனவு மற்றும் வருகை கொடுப்பனவு என்பவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சரணாலய தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தெஹிவளை மிருககாட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல புதிய மிருகக்காட்சிசாலை, ஹம்பாந்தோட்டை சபாரி பூங்கா என்பவற்றிற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக சரணாலய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் எம்.கே.எஸ் கருணாதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

விபத்து கொடுப்பனவாக தற்போது, 2 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்படுகின்ற நிலையில், அதனை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கோரப்பட்டுள்ளது.

அத்துடன், ஆயிரம் ரூபாவாக வழங்கப்படுகின்ற வருகைக்கான கொடுப்பனவை, 2 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு 7 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால், தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

நுவரேலியாவில் பயிற்சி பெற்ற மௌலவிமார்கள் இருவர் TID இனால் கைது

பிரதமராக மகிந்தவை நியமித்தமைக்கான இரகசியத்தை வெளியிட்டார் ஜனாதிபதி…

எமில் ரஞ்சன் எதிர்வரும் 08ம் திகதி வரையில் விளக்கமறியலில்