வகைப்படுத்தப்படாத

தொடரும் விபரீதங்கள் : சுயப்படம் எடுக்கச்சென்று மேலும் ஒரு இளைஞர் பலி

(UDHAYAM, COLOMBO) – இன்று மாலை களுத்துறை பிரதேசத்தில் புகையிரத கடவையில் சமுத்ராதேவி புகையிரதத்தில் சிற்றூர்ந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த சிற்றூர்ந்தின் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை , அம்பலங்கொடை – கஹவ புகையிரத நிலையத்தில் சுயப்படம் எடுக்க முற்பட்ட 26 வயது நபரொருவர் புகையிரத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

இதன் போது புகையிரதத்தில் மோதுண்டு படுகாயமடைந்த அவரின் மனைவி பலபிடிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கஹவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த தம்பதியினர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , கடந்த 24 மணிநேரத்தில் மூன்று பேர் சுயப்படம் எடுக்கச் சென்று புகையிரதத்தில் மோதுண்டு பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

India’s Vijay Shankar ruled out of World Cup with broken toe

நீர்ப்பாசன பொறியியலாளர்களும் இன்று சுகயீன விடுமுறை

பாரீசில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு 20 ஆண்டு சிறை