தேசிய மக்கள் சக்தியின் தலைமையின் கீழ் இயங்கும் தொடங்கொட பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று (13) இடம்பெற்றதுடன், அதில் தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பொது எதிர்க்கட்சியின் 13 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளதுடன், தேசிய மக்கள் சக்தியின் 12 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
