உள்நாடுபிராந்தியம்

தொடங்கொடையில் கோர விபத்து – 29 வயதுடைய இளைஞன் பலி

தொடங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலபட – புஹாபுகொட வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

மலபட சந்தியில் இருந்து புஹாபுகொடை நோக்கிப் பயணித்த ட்ரக்டர் ரக வாகனம் ஒன்று, அதற்கு எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியும் பின்னால் பயணித்தவரும் காயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் பயணித்தவர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 29 வயதுடைய யடதோல, பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தொடாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

” முஸ்லிம்” என்ற பதத்தை நீக்கிய சட்டமூலத்திற்கு ரவூப் ஹக்கீம் ஆதரவா? ஏன் கையொப்பம் இடவில்லை?

வாள்கள் இறக்குமதி : விசாரணைக்கு இரண்டு சீஐடி குழுக்கள்

இலங்கையில் புதிய 2000 ரூபா தாள்கள் மக்கள் பாவனைக்கு!

editor