உள்நாடு

தே.அ.அட்டை விநியோகம் தொடர்பில் குறுந்தகவல் சேவை

(UTV | கொழும்பு) – தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் தொடர்பில் குறுந்தகவல் சேவையை அறிமுகப்படுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவிக்கையில், “.. அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில், எதிர்வரும் சில வாரங்களில் குறுந்தகவல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை ஊடாக, தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள வருகை தருவோர் தமது நேரத்தை மீதப்படுத்திக்கொள்ள முடியும்..” என அவர் சுட்டிக்காட்யிருந்தார்.

Related posts

 நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த NPP வேட்பாளர் மரணம்!

சிலாபம் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

editor

புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவ மற்றும் கடற்படை தளபதிகளுக்கு பிரதமர் ஹரினி வாழ்த்து

editor