விளையாட்டு

தேர்வுக் குழுவினால் தலைமையில் மாற்றம்?

(UTV|COLOMBO) இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியில் புதிய மாற்றங்களை மேற்கொள்ள கிரிக்கெட் தெரிவுக் குழு அவதானம் எடுத்துள்ளதோடு, விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவும் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அணியின் மனநிலை உறுதி இல்லாமை, ஒன்றிணைந்து செயற்படும் தன்மை இல்லாமை மற்றும் ஒழுக்காற்று தொடர்பிலும் விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் ஏஞ்சலோ மேத்யூஸ், லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா ஆகியோருக்கு இடையே கலந்துரையாடல் ஒன்றினை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், லசித் மலிங்கவை தலைமையில் இருந்து நீக்கி மீளவும் ஏஞ்சலோ மேத்யூஸ் இனை நியமிக்கவோ அல்லது நிரோஷன் திக்வெல்லவுக்கு தலைமைப் பதவியினை வழங்கியோ அணியின் ஒருமைப்பாட்டினை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

இந்திய அணி பாகிஸ்தான் பயணம்

நுவன் இற்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்

MCC இன் தலைமைப் பதவியை பொறுப்பேற்றார் சங்கக்கார