அரசியல்உள்நாடு

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவு – அமைதி காலம் அமுலில்

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நேற்று (11) நள்ளிரவுடன் நிறைவடைந்தன.

அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், வேட்பாளர்கள் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்களை இன்று நள்ளிரவுக்குப் பின்னர் அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இம்முறை தேர்தல்களை கண்காணிப்பதற்காக சுமார் 6,000 பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்றை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெப்ஃரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புதுவருட வாழ்த்து

400 இற்கும் அதிக போலி எஞ்சின், செஸி உடன் ஒன்றிணைக்கப்பட்ட வாகனங்கள் – சந்தேகநபர் கைது

editor

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சென்ற ஆதம்பாவா எம்.பி

editor