அரசியல்உள்நாடு

தேர்தல் சட்டங்களை மீறிய 16 வேட்பாளர்கள் கைது

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி) 164 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 130 முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 34 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 16 வேட்பாளர்களும் 57 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சாணக்கியனை தாக்க முயன்றோர்களை தேடும் பொலிஸ்!

குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி பலி

editor

முட்டை விலை ரூ. 2 இனால் குறைவு