அரசியல்உள்நாடு

தேர்தல் ஆணைக்குழு – NPP பிரதிநிதிகள் இடையே சந்திப்பு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதிகள் இன்று (19) தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர்.

கட்சியின் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க உள்ளிட்ட சிலர் இந்த சந்திப்பில் இணையவுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கலந்துரையாடல் நேற்று (18) பிற்பகல் இடம்பெற்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Related posts

தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றைப் பார்வையிட்ட பிரதமர் ஹரிணி

editor

சஜித் – அனுர விவாதம் : ஒருங்கிணைப்பாளர் சந்திப்பு இரத்து

தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ள அனல்மின் நிலையம்!