அரசியல்உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவின் அவசர அறிவித்தல்

உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்களை உடனடியாக வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன், உறுப்பினர்களின் பெயர்களை உள்ளூராட்சி சபைகளின் விபரங்களுடன் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் 27 ஆம் திகதிக்கு முன்னர் அந்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கைப்பேசிகளை கொண்டு செல்ல தடை

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

மாலைத்தீவு நோக்கி விசேட விமானம்