ஐக்கிய நாடுகளின் தொழில்நுட்ப தேர்தல் தேவைகள் மதிப்பீட்டு பணி தொடர்பிலான குழு கூட்டம் இன்று (07) பாராளுமன்றில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது தேர்தல் முறைமை மற்றும் மக்கள் வாக்களிப்பை அதிகப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
குறிப்பாக கடந்த காலங்களில் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவடைந்து வருவதற்கான காரணங்களாக கடந்த கால அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் மீது வாக்காளர்கள் கொண்ட அதிருப்தியினால் வாக்காளர்கள் வாக்களிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்வதானாலேயே தான் சரியான ஜனநாயக தெரிவுகளை மேற்கொள்ள முடியாதுள்ளது.
எனவே வாக்களிப்பதை கட்டாயமாக்கி புதிய பொறிமுறையொன்றினை உருவாக்க வேண்டும். அதவாது வாக்குச்சாவடிகளில் வாக்களித்ததற்கான உறுதிப்படுத்தல் படிவமொன்றை வாக்காளர்களுக்கு வழங்குவதனூடாக அதனை அடிப்படையாக வைத்தே அரச சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மேலும் வடகிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் விகிதாசார முறைப்படி வாக்குகள் பேணப்படுதுடன் புதிய குடியேற்ற முறைமைகளினால் பாதிப்பிற்குள்ளான தமிழ் பேசும் மக்களின் விகிதாசார முறைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
-ஊடகப் பிரிவு