சூடான செய்திகள் 1

தேரரை கடத்திய அறுவர் கைது

(UTV|COLOMBO)-நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றின் தேரர் உள்ளிட்ட மூன்று பேரை கடந்த 9 ஆம் திகதி கடத்தி, தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்ட தேரர் உள்ளிட்ட மூவரையும் இடையில் கைவிட்டு சென்றுள்ள நிலையில், பின்னர் காவல்துறையினர் அவர்களை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிட்டப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை, ஐந்து ஓலைச்சுவடிகள், வலம்புரி சங்கு, டிபென்டர் வாகனம் மற்றும் இரண்டு கையடக்க தொலைபேசிகளையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.

 

 

 

 

Related posts

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்

போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது

பரந்தனில் விபத்து நால்வர் வைத்தியசாலையில்