உள்நாடு

தேய்ந்த டயர்கள் கொண்ட வாகனங்களுக்கு சிக்கல்

(UTV | கொழும்பு) – தேய்ந்துபோன டயர்களைக் கொண்ட வாகனங்களை ஆய்வு செய்ய நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதே இதன் நோக்கம் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஊடகப்பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்தில் வாகன விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

பல்கலைக்கழக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

விசேட பாராளுமன்ற அமர்வை 14ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானம்

editor

கல்வெவ சிறிதம்ம தேரர் மீண்டும் விளக்கமறியலில்