தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சவீன் செமகே, தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி அவரது பதவியை உடனடியாக இராஜினாமா செய்துள்ளார்.
மே 9 ஆம் திகதி இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு வரை சுமார் அரை மணி நேரம் இரண்டு பேர் அவரது வீட்டுப் பகுதிக்குள் நுழைந்து சுற்றித் திரிவதை, வீட்டில் உள்ள சிசிரிவி காட்சிகள் காட்டுகின்றன.
டாக்டர் செமகே உறங்கிக் கொண்டிருந்த படுக்கையறைக்குள் அவர்கள் எட்டிப்பார்ப்பதையும் காண முடிந்தது.
அந்த நேரத்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
டாக்டர் செமேகே, ஜனவரி 2024 இல் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.