உள்நாடு

தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

33 வயதுடைய சந்தேக நபர் மாத்தறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 16ஆம் திகதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

வீட்டின் வாயிலின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் காரணமாக சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை.

Related posts

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில் காணப்படுகின்றது – உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நாம் தயார் – சஜித் பிரேமதாச

editor

புதிய கல்வி மறுசீரமைப்பில் மாணவர்களுக்கு இரண்டு இன்டர்வெல்கள் குறித்து வெளியான தகவல்

editor

தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு

editor