அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தி – சாய்ந்தமருது பிரதேச கல்வியியலாளர்கள் சந்திப்பு

ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவை  ஆதரித்து ‘நாடு அனுரவோடு’ எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கை விளக்க சாய்ந்தமருது பிரதேச கல்வியியலாளர்கள் சந்திப்பு மாளிகைக்காடு தனியார்  வரவேற்பு மண்டபத்தில் ஞாயிறு (01) நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட செயற்குழு உறுப்பினரும் கல்முனை தொகுதி அமைப்பாளருமான ஆதம்பாவா  தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் விவசாய கொள்கையின் திட்டமிடலுக்கான உபகுழுவின் ஒருங்கிணைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் அமைப்பின் குழு உறுப்பினருமான ஜீ.வி. எச். கோட்டாபய, தேசிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட செயற்குழு உறுப்பினரும் அம்பாறை நகரசபை முன்னாள் உறுப்பினருமான இந்திக்க விஜயவிக்கிரம ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதன்போது, சாய்ந்தமருது –  மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த கல்வியியலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களின் அமைப்பாளர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

Related posts

மேலும் 12 கைதிகளுக்கு கொரோனா தொற்று

உலக தர வரிசையில் இலங்கையின் இந்த பல்கலைக்கழகம் முதலிடம் | University Ranking Sri Lanka 2023

சில அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானம்