அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் பலப்பிட்டிய பிரதேச சபையின் பட்ஜெட் தோல்வி!

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பலபிட்டிய பிரதேச சபையின் ஆரம்ப வரவு – செலவுத் திட்டம் நேற்று (16) நடைபெற்ற சபைக் கூட்டத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இதன்படி 17 எதிராகவும் 16 வாக்குகள் ஆதரவாகவும் அளிக்கப்பட்டன.

கூட்டத்துக்கு பிரதேச சபை தலைவர் அனுருத்த மகவலி தலைமை தாங்கினார்.

பலபிட்டிய பிரதேச சபை 34 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, இதில் தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த 16 பேரும் பிற அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18 பேரும் அடங்குவர்.

தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குகள் சமநிலையில் இருந்த பின்னர், தேசிய மக்கள் சக்தி கடந்த முறை சபையின் அதிகாரத்தைப் பெற்றது, பின்னர் குலுக்கல் மூலம் தலைவர் தெரிவு செய்யப்பட்டார்.

Related posts

ஸ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UL 116 விமானத்திற்கு சேதம்

PANDORA PAPERS : திரு.நடேசனுக்கு இலஞ்ச ஆணைக்குழு அழைப்பாணை

முறைப்பாடுகளுக்கு பதிவு செய்யும் பொருட்டு அவசர தொலைபேசி இல