அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் எம்.பி அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு (11) இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு அவர் செலுத்திய ஜீப் வண்டி மற்றுமொரு காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நிலையில், சப்புகஸ்கந்த பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

எனினும், இன்றைய தினம் (12) அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 41 பேர் வீடுகளுக்கு

பாராளுமன்றில் இன்று பி.சி.ஆர் பரிசோதனைகள்

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றிலும் பிணை