தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திலுள்ள பேலியகொடை நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று (19) தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பேலியகொடை நகர சபையின் தலைவர் கபில சமன் கீர்த்தியினால் வரவு செலவுத் திட்ட யோசனை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், ஒரு மேலதிக வாக்கினால் அது தோற்கடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சர்வஜன அதிகாரம் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
