ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழிகாட்டுதலுக்கு முரணாகச் சென்று, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 8 பேரின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கட்சியின் அறிவிப்புகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு முரணாக இந்த நபர்கள் செயல்பட்டுள்ளதாகவும், எனவே, அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1.வீரசிங்க தர்ஷன விதானகே – பதியலாவ பிரதேச சபை
2.மொஹொமட் நசீர் மொஹொமட் ரிநோஸ் – கற்பிட்டி பிரதேச சபை
03.ஏ.ஏ. அனுர குமார – நாத்தாண்டிய பிரதேச சபை
04.மாரசிங்க ஆரச்சிகே அமில் எரங்க – நாத்தாண்டிய பிரதேச சபை
05.ரதுகமகே உமேஷா ரஷ்மி மல்ஷானி – நாத்தாண்டிய பிரதேச சபை
06.வகலந்தே அதுல குமார வகலத் – பொல்காஹவெல பிரதேச சபை
7.பாலசூரிய முதியன்சலாகே அனுர குமுர – பொல்காஹவெல பிரதேச சபை
08.பி. கே. சுமேத லக்மால் – பெல்மடுல்ல பிரதேச சபை
