அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு – ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அந்தக் கட்சி, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வாக்களித்த சபை உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்களிடம் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது

புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார்

editor

வெலிகமயில் கொள்கலன் வெடித்ததில் மூவர் காயம்