தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பப் படிவம்
www.parliament.lk
இணையத்தளத்தில் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப வடிவத்தின்படி தயாரிக்கப்பட வேண்டும்.
முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2025 செப்டம்பர் 04ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபால் மூலம் ‘அரசியலமைப்புப் பேரவையின் பதில் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை – அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டே’ என்ற முகவரிக்கு அல்லது constitutionalcouncil@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயத்தில் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்’ என குறிப்பிட வேண்டும்.
இணைப்பு :
https://www.parliament.lk/…/sec…/advertisements/view/336