உள்நாடுவிசேட செய்திகள்

தேசிய பூங்காக்களை பார்வையிட Online ஊடாக நுழைவுச்சீட்டு

தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக நேற்று (10) முதல் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுடுல்ல தேசிய பூங்காவை பார்வையிடுவதற்காக நேற்று முன்தினம் (09) நீண்ட வரிசை காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அசௌகரிங்களுக்குள்ளானதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் ஏற்படும் அசௌகரியங்களை குறைத்துக்கொள்ளும் நோக்கில் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் இராஜினாமா

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கடவுச்சீட்டு அலுவலகத்தின் விசேட அறிவிப்பு

editor