உள்நாடு

தேசிய கண் வைத்தியசாலைக்கு முற்பதிவு செய்த பின்னர் வருமாறு அறிவிப்பு

(UTV|கொழும்பு)- தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருகை தரும் நோயாளர்கள் முற்பதிவு செய்த பின்னர் வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

011 7 682 741, 011 7 682 554, 011 7 682 558 , 011 7 898 301 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு முற்பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைகளுக்காக மாத்திரம் தேசிய கண் வைத்தியசாலைக்கு வருகை தருமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் போன்று ஸ்ரீ.சு.கட்சி சில உடன்படிக்கைகளுடன் களத்தில் இறங்கும்

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி திட்டம்!

இராணுவ உறுப்பினருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை