அரசியலமைப்பு சபையின் முறையான ஒப்புதல் இல்லாமல் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் இன்று (28) நீதிபதிகள் ஜனக் டி சில்வா, சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது மனுக்களை செப்டம்பர் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர்.