உள்நாடு

தேசபந்து தென்னகோனை கொலை செய்ய கஞ்சிபானை இம்ரான் திட்டமாம்!

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை படுகொலை செய்ய பாதாள உலகத் தலைவனான கஞ்சிபான இம்ரான் திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தேசபந்து தென்னகோனுக்குத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட நிலையில் அவரது முன்னைய பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது,

மேலும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர முன்னைய பாதுகாப்பு இன்னும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 745 ஆக அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் 50 மி.மீற்றர் அளவில் பலத்த மழை

லாஃப் சமையல் எரிவாயுவின் விலையில் மீண்டும் திருத்தம்