முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 6 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகம-பெலன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி அன்செல்ம் டி சில்வா மற்றும் ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.