உள்நாடு

தேசபந்து தென்னகோனின் முன் பிணை மனுவின் தீர்ப்பு தொடர்பில் வெளியான தகவல்

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன் பிணை மனுவின் தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி வழங்கப்படும் என கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபராகவிருந்த தேசபந்து தென்னக்கோனின் தவறான நடத்தை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரணை செய்ய பாராளுமன்ற விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

பின்னர் தேசபந்து தென்னக்கோன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என பாராளுமன்ற விசாரணைக் குழு கண்டறிந்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட அரகலய போராட்டம் குறித்த வழக்கு தொடர்பில் தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் முன் பிணை மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்றைய தினம் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அட்டுளுகம சிறுமி கொலை : சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய நபர் கைது

நத்தாரை முன்னிட்டு சிறப்பு புகையிரத சேவை

சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்