உள்நாடுபிராந்தியம்

தேங்காய் திருடச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு

குருணாகல் – வீரம்புகெதர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உஹுமீய பகுதியில் வீடொன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் புதன்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.

குருணாகல் வாரியபொல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனெ காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

இந்த இளைஞன் உஹுமீய பிரதேசத்திலுள்ள தென்னந்தோப்பு ஒன்றிற்குள் சென்று தேங்காய் திருட முயன்றுள்ளார்.

இதன்போது தென்னந்தோப்பின் உரிமையாளர் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரான தென்னந்தோப்பின் உரிமையாளர் 12 ரக போர் துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வாரியபொல பகுதியைச் சேர்ந்த ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரம்புகெதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை பலி

editor

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 293 ஆக உயர்வு

இன்று மாலை ரஞ்சனுக்கு புதிய பதவி