உள்நாடு

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – துப்பாக்கிதாரி கைது

தெஹிவளை பொலிஸ் பிரிவின் நெதிமால பகுதியில் கடந்த 19 ஆம் திகதி வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த நபரொருவரை சுட்டுக்கொல்ல முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் 10 கிராம் 160 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், குற்றத்திற்கு உதவியதற்காக மற்றொரு சந்தேக நபரும் 10 கிராம் 350 மில்லி கிராம் ஐஸ் என்ற போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் 38 மற்றும் 43 வயதுடைய தெஹிவளை மற்றும் மிஹிந்தலை பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக கலந்துரையாடல்

குழந்தைகள் உயிரிழக்க காரணமான இந்திய மருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படவில்லை

20 இற்கு எதிராக முதல் மனுத்தாக்கல்