சூடான செய்திகள் 1

தெஹிவளையில் 6 வாள்களுடன் வர்த்தகர்கள் கைது

(UTV|COLOMBO) தெஹிவளை பிரதேசத்தின் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரும் மேலுமொரு வர்த்தகரும் 6 வாள்களுடன்  இன்று(29) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 5 மா​டிகளைக் கொண்ட கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டிலிருந்தும், மற்றொரு வர்த்தகரின் வீட்டிலிருந்தும் இந்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கைதுசெய்யப்பட்ட வர்த்தகர்களுள் ஒருவர் வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் என்றும் ஏனைய வர்த்தகர் மருந்துப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த நிசாம் காரியப்பர்

editor

இலங்கை தேயி​லை, ஒரு கப் தேநீர் இங்லாந்தில் இவ்வளவு விலையா?

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் இராணுவ தளபதியை சந்திப்பு