உள்நாடுபிராந்தியம்

தெஹியோவிட்ட பகுதியில் விபத்தில் சிக்கிய பஸ் – 42 பேர் வைத்தியசாலையில்

கேகாலை-அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (02) காலை இடம்பெற்று உள்ளது.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெஹியோவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

குடிநீரில் இரசாயணம் கலந்துள்ளதா ? பாராளுமன்றத்தில் இரா. சாணக்கியன்

editor

மன்னார், மாந்தை கிராம அமைப்புக்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைப்பு!

இலங்கைக்குள் ஊடுருவ ஆரம்பித்துள்ள புரெவி புயல்