இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் கடற்படையினரால் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட சுமார் 450 மில்லியன் ரூபா மதிப்புள்ள 185 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 112 கிலோகிராம் ஐஸ் ஆகியவை தெஹிபாலே என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானது என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் மீனவர்கள், அவர்களின் தொடர்பு சாதனங்களுடன் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில், கடலில் பல நாட்கள் செலவிட்ட பின்னர், இரண்டு இழுவைப் படகுகளில் ஒன்று கடற்படையின் நீண்ட தூர செயற்பாட்டுக் கடற்படை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகளின் கப்பல்களால் முதலில் கைப்பற்றப்பட்டது.
10 மூடைகளில் அடைக்கப்பட்ட 109 கிலோகிராமுக்கு மேற்பட்ட ஹெராயினும் 112 கிலோகிராமுக்கு மேற்பட்ட ஐஸும் இதில் இருந்தன.
முதல் படகு கைப்பற்றப்பட்ட பின்னர், கடற்படைக்கு மற்றொரு மீன்பிடி படகு தொடர்பில் தகவல் கிடைத்ததும அதிகாரிகள் அந்தப் படகையும் பின்தொடர்ந்து சென்று கைப்பற்றினர்.
அந்தப் படகில் நான்கு பொதிகளில் இருந்து 75 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருட்களை கடற்படை பறிமுதல் செய்ததுடன் இலங்கைக்கு போதைப்பொருட்களை கொண்டு வந்த ஆறு சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடற்படையினர் நேற்றுக் (25) காலை 11 சந்தேக நபர்களுடன் இரண்டு படகுகளையும் போதைப்பொருட்களையும் டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.
