அரசியல்உள்நாடுவிளையாட்டு

தெற்காசிய செஸ்ட்போல் போட்டியில் முதலாம், இரண்டாம் இடத்தை வென்ற அணியினருக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவிப்பு!

2 ஆவது தெற்காசிய செஸ்ட்போல் போட்டி இம்மாதம் 17, 18 ஆகிய இரு தினங்களில் இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்துள்ள
உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

மேற்படி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணியைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினரும் மற்றும் பங்களாதேஷ்
நாட்டைச் சேர்ந்த பெண்கள் அணியினரும் பங்குபற்றின.

மேற்படி நடைபெற்ற தெற்காசிய ஆண்கள் மற்றும் பெண்கள் செஸ்ட்போல் போட்டியில்
இலங்கை அணி வெற்றி பெற்றதுடன், இந்தியா அணி இரண்டாம் இடத்தைப் வென்றது.

குறித்த போட்டியில் பங்களாதேஷ் அணியினர் வெண்கலப் பதக்கத்தை வென்றது.

2 ஆவது தெற்காசிய செஸ்ட்போல் போட்டியில் முதலாம் இடத்தை வென்ற இலங்கை அணியும் இரண்டாம் இடத்தை வென்ற இந்திய அணியும் இன்றையதினம் (19) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன அவர்களை சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத் தொகுயில் வைத்து சந்தித்தது .

மாகாண ஆளுநர் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து பாராட்டினார்.

மேற்படி போட்டியை இலங்கை செஸ்ட்போல் சங்கம் ஏற்பாடு செய்திருதமை குறிப்பிடத்தக்கது.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் தொடர்பில் அறிவிப்பு

இதுவரையில் கொரோனாவுக்கு 618 பேர் பலி

எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை