உள்நாடு

தெரிவுக்குழு மற்றும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழு மற்றும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை (12) இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்போது, ரஞ்சன் ராமநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குரல் பதிவுகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளுக்கான நிகழ்ச்சிநிரலைத் தயாரிப்பது தொடர்பில் நாளைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

பாராளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இராஜாங்க அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

கொஸ்லந்தை – மீரியபெத்தயில் 16 குடும்பங்களை உடன் வெளியேற்றம்.

மாணவர் ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்