வகைப்படுத்தப்படாத

தெரனியாகலையில் 7 வயது சிறுமியும், 45 வயதான நபரும் படுகொலை

(UDHAYAM, COLOMBO) – தெரனியாகலை மாகல பிரதேசத்தில் 45 வயதான நபரொருவரும், 7 வயதான சிறுமியும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அவர்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் படுகாயங்களுக்கு உள்ளான சிறுமியின் தாய், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அதே பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலைகள் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ள நிலையில், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Sri Lanka all set for Expo 2020 Dubai

Suspect arrested with cigarettes worth Rs.1.3M

மன்னாரில் 29 வயதான இளைஞர் கொலை