உலகம்

தென் கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

(UTV|கொவிட்-19)- தென் கொரியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 79 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த ஏப்ரல் 5-ஆம் திகதிக்கு பின் ஒரேநாளில் பதிவான அதிக அளவிலான எண்ணிக்கை இதுவாகும்.

இதற்கமைய தென்கொரியாவில் இதுவரையான காலப்பகுதியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளதுடன் 269 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தென் கொரிய அரசு எடுத்த பல துரித நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு பிறகு நீண்ட காலமாக அந்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

பங்களாதேஷ் விமான விபத்தில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் பலி – 50 பேர் காயம்!

editor

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் – 46 குழந்தைகள் உட்பட 104 பேர் பலி – 250க்கும் மேற்பட்டோர் காயம்

editor

14 ஆண்டு பிரதமராக இருந்தவர் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.