வகைப்படுத்தப்படாத

தென் அமெரிக்க பயணத்தை ரத்து செய்த டொனால்டு டிரம்ப்

(UTV|SOUTH KOREA)-அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். லிமாவில் நடைபெறும் அமெரிக்கர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்கவும், அதன்பின்னர் கொலம்பியா செல்லவும் முடிவு செய்திருந்தார்.  தற்போது அவர் தனது பயணத்திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சிரியாவில் நடைபெற்ற ரசாயன ஆயுத தாக்குதலுக்கு அமெரிக்காவின் பதிலடி நடவடிக்கையை மேற்பார்வையிட்டு முடுக்கிவிடும் பணி இருப்பதால் டிரம்ப் தென் அமெரிக்கா செல்லவில்லை என்றும், டிரம்ப் சார்பில் லிமா மற்றும் கொலம்பியாவுக்கு துணை அதிபர் மைக் பென்ஸ் செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் கிழக்கு கவுட்டா நகரை கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து மீட்கும் உச்சகட்டப் போரில் அரசுப் படைகள் கடந்த வாரம் ரசாயன தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் அரசுப் படைகளுக்கு ஆதரவு அளிக்கும் ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் மீது அமெரிக்கா குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

කසළ ආනයනය කරන පුද්ගලයන්ට එරෙහිව අපරාධ චෝදනා යටතේ නඩු – මංගල සමරවීර

Maximum security for Esala Perahera

‘47% not enough to win Presidential Election’