நாடளாவிய ரீதியில் தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தென்னை அபிவிருத்திப் பிரிவிற்கான திட்ட
அங்குரார்ப்பன நிகழ்வு இன்று களுவாஞ்சிகுடி கமநல சேவை நிலையத்தில் இடம் பெற்றது.
களுவாஞ்சிகுடி தென்னை அபிவிருத்தி சபையின் தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான
வே.உமாகரன், எல்.கருனேஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் யூ.உதயஶ்ரீதர் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வில் தென்னை அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட
உதவி பிராந்திய முகாமையாளர்
கே.ரவிச்சந்திரன் கலந்து சிறப்பித்தார்.
இதன் போது தென்னை விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், செய்முறைப் பயிற்சிகள் ஊடாகவும் தெளிவுபடுத்தப்பட்டு, விவசாயிகளுக்கான உரம் வழங்கிவைக்கப்பட்டது.
பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் அனுசரனையுடன் நாடளாவிய ரீதியி தென்னை விவசாயிகளுக்கா உரமானிய திட்டத்தின் கீழ் காய்க்கும் மரங்களுக்கான (APM) உரம் மானிய அடிப்படையில் உரம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகது.
-ஸோபிதன் சதானந்தம்
