உலகம்

தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி பதவியேற்றார்

தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லீ ஜே-மியுங், ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

சியோலில் உள்ள தேசிய சபையில் அவர் பதவியேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் கொரியாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய லீ ஜே-மியுங் வெற்றிப்பெற்றார்.

சர்ச்சைக்குரிய தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலேயே அவர் வெற்றிப்பெற்றுள்ளார்.

லீ ஜே-மியுங் 49.31 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அவருடன் போட்டியிட்ட கிம் மூன் சூ 41.30 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

Related posts

நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

சர்வதேச பொலிஸ் அமைப்பின் முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனை

வளர்ப்பு பிராணிகளுக்கும் கொவிட்19 பரிசோதனை