உள்நாடு

தென்கிழக்குப் பல்கலையில் இடைநிறுத்தப்பட்ட 22 மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை!

முதலாம் வருட மாணவர்களை பகிடிவதை செய்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் கொண்ட ஒரு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொறியியல் பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் குழு ஒன்று ,முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணையின் அடிப்படையில் கடுமையான ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு- நீதிமன்றம் ஒத்திவைப்பு

தொற்றிலிருந்து 715 பேர் குணமடைந்தனர்

வீதி ஒழுங்கு விதி மீறல்: தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு