உள்நாடு

தெதுருஓயா பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை

(UTV | குருநாகல்) – தெதுருஓயா பகுதியில் இடம்பெற்ற மணல் கடத்தல் நடவடிக்கையை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த, பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மோதி கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தப்பிச்சென்ற டிப்பர் ரக வாகனத்தின் சாரதியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

Related posts

உடன் அமுலாகும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு.

மலையக ரயில் சேவை பாதிப்பு

அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில்