சூடான செய்திகள் 1

தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – சிலாபம், தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் நேற்று (17) திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சிலாபம், தெதுருஓயா நீர்த்தேக்கத்தில் 70 அடி 6 அங்குலம் உயரத்தில் நீரின் கனஅளவு காணப்படுவதால், தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் 2 அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளன.

இதனால், தெதுருஓயா நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார் அமைச்சர் ரஞ்சன்

சஜித் – கூட்டமைப்பு இடையே இன்று சந்திப்பு

இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவராக ரியாஸ் சாலி நியமனம்!!