உள்நாடு

துஷார உபுல்தெனியவுக்கு பிணை!

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற பெயரில் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து ஒரு கைதியை விடுதலை செய்வதற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை தொடர்பான வழக்கு இன்று (09) கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட நீதவான், சந்தேக நபரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.

Related posts

மின் துண்டிப்பு – அறிக்கை தொடர்பில் இன்று விசாரணை

தபால்மூல வாக்களிப்பு நாளையுடன் நிறைவு

editor

9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

editor