உள்நாடுசூடான செய்திகள் 1

துல்ஹஜ் மாத தலைப்பிறை தென்பட்டது – ஜூன் 7 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, இன்று 28ஆம் திகதி புதன்கிழமை மாலை வியாழக்கிழமை இரவு ஹிஜ்ரி 1446 துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.

2025 மே மாதம் 29ஆம் திகதி, வியாழக்கிழமை ஹிஜ்ரி 1446 துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.

அதன்படி, ஹஜ்ஜுப் பெருநாள் ஜூன் 7 ஆம் திகதியன்று கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் ஊடகவியலாளர்களது உரிமைகளை குறைக்காது

26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை!

எதிர்வரும் 9ம் திகதி மஹிந்த பதவியேற்பு