அரசியல்உள்நாடு

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் புதிய பதில் செயலாளராக வேதநாயகம் ஜெகதீசன் நியமனம்

இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட தர அதிகாரியான வேதநாயகம் ஜெகதீசன் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக அவர்கள் இன்று (14.10.2025) முதல் அமுலாகும் வகையில் அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளார்.

வி. ஜெகதீசன், இதற்கு முன்பு அதே அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்த நிலையில், இன்று (14) தமது புதிய பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அரசு நிர்வாகத்தில் சிறப்பான சேவையைப் புரிந்துள்ள வி. ஜெகதீசன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், பதில் அரசாங்க அதிபராகவும், பதில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராகவும் திறன்பட கடமையாற்றியுள்ளார்.

அவரின் நியமனம், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் துறையின் நிர்வாக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு புதிய ஊக்கத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-நூருல் ஹுதா உமர்

Related posts

ஜனாதிபதியின் அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பு

ரணில் கைது செய்யப்பட்டமை கவலைக்குரியது – சிறைவாசம் அனுபவிக்காமல் அரசியல் வாழ்க்கை பூரணமடையாது – மைத்ரிபால சிறிசேன

editor

சமையல் எரிவாயு தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்