அரசியல்உள்நாடு

துரைராசா ரவிகரன் எம்.பி கட்சிப் பதவிகளைத் துறந்தார்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் அதிகாரசபைகளுக்கான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளதாக அறியமுடிகின்றது.

அந்த வகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே பாராளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக அறியமுடிகின்றது.

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தாம் கட்சிப்பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோருக்கு நேற்று (24) கடிதத்தின் மூலம் அறிவித்திருப்பதாகவும் மேலும் அறியக்கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தனியார் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக சட்டம் அமுலுக்கு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக செயலிழக்கச் செய்து நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

தவறிழைத்தவர்கள் தப்பவே முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor