உள்நாடு

துருக்கி விமானம் ஒன்று கட்டுநாயக்கவில் விபத்து

(UTV | கொழும்பு) – துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் நேற்று (04) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது.

330 எயார்பஸ் சரக்கு விமானம் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குப் புறப்படவிருந்த விமானத்தின் மீது ஏற்றிக் கொண்டிருந்த கொள்கலன் ஒன்று விமானத்தின் இயந்திர இலக்கம் 2 இல் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு விமான நிலையத்தை சுற்றி பலத்த காற்று வீசியது.

எனினும் விமான நிலைய நடத்துநர்கள் முறையாக பிரேக் போடாததால் இந்த விபத்துகள் நடந்ததா என விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் இன்னும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இந்தோனேசியாவில் கைதான குற்றவாளிகள்

editor

கடூழிய சிறைத்தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் மனு தாக்கல்

editor

“அரச ஊழியர்கள் நாளை பணிக்கு வர வேண்டாம்” – பிரதமர்